/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காவிரி குழாயில் உடைப்பு; குடிநீர் வீணாகிறது
/
காவிரி குழாயில் உடைப்பு; குடிநீர் வீணாகிறது
ADDED : ஜூலை 05, 2025 11:08 PM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் டி.எஸ்.பி., அலுவலகம் அருகே காவிரி குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது.
முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு ரோட்டோரத்தில் ராட்சத குழாய் மூலம் காவிரி குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
முதுகுளத்துார் பரமக்குடி ரோடு டி.எஸ்.பி., அலுவலகம் அருகே ரோட்டோரத்தில் செல்லும் காவிரி குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது.
அலுவலகம் முன்பு குளம் போல் தேங்கியுள்ளது.இதனால் ரோடு சேறும் சகதியுமாக மாறி உள்ளதால் நடப்பதற்கு சிரமப்படுகின்றனர். சுற்றியுள்ள பகுதிகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.