ADDED : ஜன 18, 2026 05:44 AM
அ நிறம் | அளவு
முதுகுளத்துார்: முதுகுளத்துார் சுற்றியுள்ள கிராமங்களுக்கு ரோட்டோரத்தில் அமைக்கப்பட்டுள்ள குழாய் மூலம் காவிரி குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. கமுதி ரோடு பேரூராட்சி அலுவலகம் அருகே காவிரி குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது.
முதுகுளத்துார் கமுதி ரோட்டில் அடிக்கடி ஏற்படும் குழாய் உடைப்பால் கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
குழாய் உடைந்த இடத்தில் ரோடும் சேதமடைவதால் மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
