sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு பணிகள் மந்தம்: விவசாயிகள் குற்றச்சாட்டு

/

காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு பணிகள் மந்தம்: விவசாயிகள் குற்றச்சாட்டு

காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு பணிகள் மந்தம்: விவசாயிகள் குற்றச்சாட்டு

காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு பணிகள் மந்தம்: விவசாயிகள் குற்றச்சாட்டு


ADDED : அக் 19, 2024 03:17 AM

Google News

ADDED : அக் 19, 2024 03:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்,:காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு இணைப்புத்திட்டம் 14ஆயிரத்து 400 கோடி மதிப்பீட்டில் 2021ல் துவங்கியது. 262 கி.மீ., நீள கால்வாய் பணியில் இதுவரை 9 கி.மீ., மட்டுமே முடிந்துள்ளன. நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை விரைவுபடுத்த வேண்டும், என விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தினர்.

காவிரி, வைகை, கிருதுமால் குண்டாறு இணைப்புக்கால்வாய் நீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு கூட்டம் புதுக்கோட்டையில் நடந்தது. மாநிலத் தலைவர் மாரிமுத்து தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் அர்ச்சுனன், மாநில செயலாளர் ராமமுருகன் ஆகியோர் பங்கேற்றனர்.

அர்ச்சுனன் கூறியது: காவிரி, வைகை இணைப்பு கால்வாய் திட்டத்தில் முதல் கட்டமாக கரூர் மாவட்டம் மாயனுார் கட்டளை கால்வாய் கதவணையிலிருந்து புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு வெள்ளாறு வரை 118 கி.மீ., துாரம் கால்வாய் அமைத்து 342 ஏரிகள் நிரப்பப்பட்டு 42 ஆயிரத்து 170 ஏக்கர் பாசனம் பெறும். இந்த பகுதியில் இதுவரை 9 கி.மீ., மட்டுமே கால்வாய் வெட்டப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு வெள்ளாறு முதல் சிவகங்கை மாவட்டம் வைகை ஆற்றில் இணைப்பது வரை 109 கி.மீ., 220 ஏரிகள் மூலம் 23 ஆயிரத்து 245 ஏக்கர் பாசனம் பெறும். இதில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் கூட தொடங்கவில்லை.

மதுரை மாவட்டம் வைகை ஆற்றிலிருந்து விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே புதுப்பட்டியில் குண்டாறுடன் 34 கி.மீ., துாரம் இணைத்து விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 492 ஏரிகள் நிரப்பப்பட்டு 44 ஆயிரத்து 547 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற வேண்டும். வெள்ளக்கால்வாயில் 6300 மில்லியன் கன அடி நீர் காவிரியிலிருந்து தென் மாவட்டங்களுக்கு திருப்பப்பட்டால் விவசாயம், கால்நடை வளர்ப்பு, குடிநீராதாரம், நிலத்தடி நீர் மேம்படும்.

இந்த திட்டம் மந்த கதியில் நடக்கிறது. திட்டம் நிறைவு பெறுவதற்கு பல ஆண்டுகள் ஆகும். மூன்று பகுதியிலும் பணிகளை தொடங்கி விரைவு படுத்தினால் மட்டுமே திட்டம் நிறைவேறும்.

ராம முருகன் கூறியது: மாயனுார் கதவணை பகுதியில் 4.10 கி.மீ., துாரம் கால்வாய் அமைக்க 171 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டு கால்வாய் வெட்டும் பணிகள் நடந்து வருகிறது. திருச்சி, புதுக்கோட்டை மாவட்ட இணைப்புபகுதியில் 5.35 கி.மீ., துாரம் கால்வாய் வெட்ட 160 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

கரூர்--திருச்சி நெடுஞ்சாலையில் ஒரு பாலம் அமைக்கவும், ரயில் பாதையில் ஒரு பாலம் அமைக்கவும் 612 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைத்துறை, ரயில்வே துறை அனுமதிக்காக பணிகள் காத்திருக்கின்றன.

இரண்டாம், மூன்றாம் பகுதியான சிவகங்கை மாவட்டம், ராமநாதபுரம், விருதுநகர் பகுதியில் நிலம் கையகப்படுத்துவதற்கான பணிகள் கூட நடக்க வில்லை. அரசு திட்டத்தினை விரைந்து முடித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

திட்டம் தொடங்கப்பட்டு நான்கரை ஆண்டுகளாகியும் 262 கி.மீ., நீள கால்வாய் பணியில் இதுவரை 9 கி.மீ., மட்டுமே பணிகள் முடிந்துள்ளன. இதே நிலையில் பணிகள் நடந்தால் 15 ஆண்டுகளானாலும் பணிகள் நிறைவு பெறாது.

இத்திட்டம் 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மூன்று பகுதிகளுக்கும் தனித்தனியாக நிதி ஒதுக்கீடு செய்து ஒரே நேரத்தில் பணிகளை தொடங்கினால் மட்டுமே விரைவில் முடிவடையும் என விவசாயிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us