/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குழாய் உடைந்து ஒரு மாதமாக வீணாகும் காவிரி கூட்டுக்குடிநீர்
/
குழாய் உடைந்து ஒரு மாதமாக வீணாகும் காவிரி கூட்டுக்குடிநீர்
குழாய் உடைந்து ஒரு மாதமாக வீணாகும் காவிரி கூட்டுக்குடிநீர்
குழாய் உடைந்து ஒரு மாதமாக வீணாகும் காவிரி கூட்டுக்குடிநீர்
ADDED : ஆக 20, 2025 11:37 PM
திருவாடானை : திருவாடானை-மங்களக்குடி ரோட்டில் அஞ்சுகோட்டையில் காவிரி நீர் குழாய் உடைந்து ஒரு மாதமாக வீணாகிறது.
அஞ்சுகோட்டை மட்டுமின்றி சுற்றி கிராமங்களுக்கு குழாய் வழியாக காவிரி கூட்டுகுடிநீர் வினியோகப்படுகிறது.
இந்நிலையில் குழாய் சேதமடைந்து ஒருமாதமாக குடிநீர் வீணாகியுள்ளது. இதனால் கிராமங்களுக்கு போதிய நீர் செல்லாததால் அப்பகுதி மக்கள் சிரமம் அடைந்துள்ளனர். வெயிலின் தாக்கம் காரணமாக குடிநீர் தேவைஅதிகரித்துள்ள நிலையில் மக்களுக்கு பயன் இல்லாமல் நீர் வீணாகிறது. குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் குழாய் உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.