/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் காவிரி குடிநீர் வருது.. வரல...
/
ராமநாதபுரத்தில் காவிரி குடிநீர் வருது.. வரல...
ADDED : ஆக 02, 2025 12:18 AM
ராமநாதபுரம்: மாவட்ட தலைநகரான ராமநாதபுரத்திற்கு காவிரி கூட்டு குடிநீர் தற்போது 33 லட்சம் லிட்டர் வரை வழங்கப்பட்ட போதும் ஜல்-ஜீவன் திட்டத்தில் புதிய குழாய்கள் பதிக்கும் போது அடிக்கடி பழைய குழாய்கள் சேதமடைந்து விடுவதால் நகரில் தினமும் குடிநீர் வராமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.
ராமநாதபுரம் பெயரளவில் மட்டுமே சிறப்பு நிலை நகராட்சியாக உள்ளது. அடிப்படை வசதியான குடிநீர், பாதாள சாக்கடை பிரச்னை பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். குறிப்பாக ராமநாதபுரம் நகராட்சி 33 வார்டுகளுக்கும் தினமும் 50 லட்சம் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது.
தற்சமயம் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் 33 லட்சம் லிட்டர் வழங்கப்படுகிறது. மேலும் தற்போது குழாய்கள் மாற்றும் பணியால் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு நகர், கிராமங்களில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுகிறது. இதனால் 2, 3 நாட்களுக்கு ஒருமுறை பெயரளவில் குடிநீர் வருவதால் மக்கள் தனியார் லாரிகளில் குடம் ரூ.13க்கு விலை கொடுத்து வாங்கி சிரமப்படுகின்றனர்.
ராமநாதபுரம் நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் குழாய்கள் சேதம் காரணமாக விநியோகத்தில் சிக்கல் ஏற்படுகிறது. இது தொடர்பாக குடிநீர் வடிகால்வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம். ராமநாதபுரத்தில் தொய்வு இல்லாமல் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றனர்.