/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காவிரி குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு
/
காவிரி குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு
ADDED : ஏப் 11, 2025 04:53 AM

முதுகுளத்துார்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக முதுகுளத்துார் தனியார் பள்ளி அருகே காவிரி குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டது.
முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு ரோட்டோரத்தில் ராட்சத குழாய் மூலம் காவிரி குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. முதுகுளத்துார் தேரிருவேலி விலக்கு ரோடு தனியார் மேல்நிலைப்பள்ளி அருகே ரோட்டோரத்தில் செல்லும் காவிரி குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது.
எந்தவித பயன்பாடின்றி கழிவுநீர் கால்வாயில் சென்று வீணாகிறது. இதனால் சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குழாய் உடைப்பை சரி செய்தனர்.