/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காவிரி குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு
/
காவிரி குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு
ADDED : அக் 23, 2025 11:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு ரோட்டோரத்தில் அமைக்கப்பட்டுள்ள குழாய் மூலம் காவிரி குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
முதுகுளத்துார் கமுதி ரோடு அரசு மேல்நிலைப்பள்ளி அருகே காவிரி குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது. சுற்றியுள்ள கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம் உள்ளது. குழாய் உடைப்பை சரி செய்வதற்காக தோண்டப்பட்டுள்ள பள்ளம் மூடப்படாமல் இருந்தது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குழாய் உடைப்பை சரி செய்தனர்.

