/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராட்சத குழாய் உடைந்து வீணாகும் காவிரி குடிநீர் அதிகாரி அலட்சியம்
/
ராட்சத குழாய் உடைந்து வீணாகும் காவிரி குடிநீர் அதிகாரி அலட்சியம்
ராட்சத குழாய் உடைந்து வீணாகும் காவிரி குடிநீர் அதிகாரி அலட்சியம்
ராட்சத குழாய் உடைந்து வீணாகும் காவிரி குடிநீர் அதிகாரி அலட்சியம்
ADDED : மார் 31, 2025 06:22 AM

முதுகுளத்துார் : -முதுகுளத்துாரில் பரமக்குடி ரோடு பிள்ளையார் கோயில் எதிரே காவிரி குடிநீர் செல்லும் ராட்சத குழாய் சேதமடைந்து கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக குடிநீர் வீணாகிறது.
முதுகுளத்துார் ரோட்டோரத்தில் ராட்சத குழாய் பதிக்கப்பட்டு பேரூராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு காவிரி குடிநீர் விநியோகம் செய்கின்றனர். இந்நிலையில் பரமக்குடி ரோடு பிள்ளையார் கோயில் எதிரில் ரோட்டோரத்தில் செல்லும் ராட்சத குழாய் சேதமடைந்துள்ளதால் காவிரி குடிநீர் வீணாகி கழிவுநீர் கால்வாய் செல்கிறது.
பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக முதுகுளத்துார் பேரூராட்சிக்கு உட்பட்ட ஐந்து இடங்களில் குழாய் உடைந்து வீணாகி வருகிறது. அதிகாரிகள் ஆய்வு செய்து குழாய் சேதத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.