/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வள்ளிமாடன் வலசையில் காவிரி குடிநீர் வரவில்லை கண்டுகொள்ளாத அதிகாரிகள்
/
வள்ளிமாடன் வலசையில் காவிரி குடிநீர் வரவில்லை கண்டுகொள்ளாத அதிகாரிகள்
வள்ளிமாடன் வலசையில் காவிரி குடிநீர் வரவில்லை கண்டுகொள்ளாத அதிகாரிகள்
வள்ளிமாடன் வலசையில் காவிரி குடிநீர் வரவில்லை கண்டுகொள்ளாத அதிகாரிகள்
ADDED : ஆக 13, 2025 11:18 PM
திருப்புல்லாணி:திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட குதக்கோட்டை ஊராட்சி, வள்ளி மாடன் வலசை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த பல ஆண்டுகளாக காவிரி நீர் வழங்கப்படாமல் உள்ளதால் பொதுமக்கள் சிரமமடைகின்றனர்.
வள்ளிமாடன் வலசை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இந்நிலையில் உள்ளூரில் உள்ள கிணற்றில் இருந்து குடிநீர் மேல்நிலைத் தொட்டிகளில் ஏற்றப்பட்டு அவற்றிலிருந்து டேங்குகளின் மூலமாக தண்ணீர் வினி யோகம் செய்யப்படுகிறது.
இந்நீரை புழக்கத்திற்கு பயன்படுத்துவதற்கு மட்டுமே உள்ளது. வள்ளி மாடன் வலசை சேர்ந்த விவசாயி ராமமூர்த்தி கூறியதாவது:
இப்பகுதியில் காவிரி நீர் கானல் நீராகவே உள்ளது. உள்ளூர் கிணற்றில் இருந்து தண்ணீரை புழக்கத்திற்காகவே மக்களுக்கு வினியோகம் செய்கின்றனர்.
இந்நிலையில் குடிப் பதற்கான தண்ணீர் வசதி இல்லை. இதனால் குடம் ரூ.12க்கு விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம்.
வருமானத்தின் ஒரு பகுதியை குடிநீருக்கே செலவிட வேண்டிய நிலை உள்ளது.
எனவே இப்பகுதியில் காவிரி குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான நட வடிக்கையை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்றார்.