/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தட்டானேந்தல் கிராமத்திற்கு காவிரி குடிநீர் விநியோகம் தினமலர் செய்தி எதிரொலி

ADDED : மே 20, 2025 12:43 AM
முதுகுளத்துார்: -தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக முதுகுளத்துார் அருகே தட்டானேந்தல் கிராமத்திற்கு காவிரி குடிநீர் வழங்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தட்டானேந்தல் கிராமத்தில் 120க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு கடந்த பல ஆண்டுகளாகவே காவிரி குடிநீர் வசதி இல்லை.
கிராமத்தில் அமைக்கப்பட்ட காவிரி குடிநீர் குழாய் பராமரிப்புயின்றி உள்ளது. இதனால் குடிநீர் வசதி இல்லாமல் சிரமப்பட்டு வந்தனர். தினந்தோறும் குடம் ரூ.15க்கு டிராக்டர் தண்ணீரை வாங்கி பயன்படுத்துகின்றனர்.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக தட்டானேந்தல் கிராமத்திற்கு காவிரி குடிநீர் வழங்கப்பட்டது. செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழுக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.