/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சி.பி.எஸ்.இ.,ல் பிளஸ் 1 படித்தோர் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதலாம்
/
சி.பி.எஸ்.இ.,ல் பிளஸ் 1 படித்தோர் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதலாம்
சி.பி.எஸ்.இ.,ல் பிளஸ் 1 படித்தோர் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதலாம்
சி.பி.எஸ்.இ.,ல் பிளஸ் 1 படித்தோர் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதலாம்
ADDED : டிச 24, 2025 06:15 AM

ராமநாதபுரம்: நடப்பு கல்வியாண்டில் பிளஸ் 1 அரசு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால் சி.பி.எஸ்.இ.,ல் பிளஸ் 1 படித்த மாணவர்கள் விரும்பினால் தமிழ்நாடு பாடத்திட்டத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதலாம். 2026 மார்ச் தேர்வாளர் பெயர் பட்டியலில் சேர்க்க அரசு தேர்வுகள் இயக்ககம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்ககம் துணை இயக்குநர் ஜெயராமன் அனைத்து மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதாமல் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் பள்ளிகளில் பிளஸ் 1 படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்களை தமிழ்நாடு பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பெயர் பட்டியலில் சேர்க்கலாம்.
அதற்கு சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலரின் இணைச்சான்று, பள்ளி கல்வி இயக்குநர் (தனியார் பள்ளி) அனுமதி ஆணை மற்றும் பாஸ்போர்ட் புகைப்படத்துடன் கூடிய மாணவரின் உறுதிமொழி படிவம் ஆகியவற்றை அந்தந்த மாவட்டத்தில் உள்ள அரசு தேர்வுகள் உதவி இயக்குநரிடம் சமர்பிக்கலாம், என தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களுடன் மார்ச் 2026 பிளஸ் 2 பொதுத்தேர்வு பட்டியலில் சேர்ப்பதற்கு டிச.,31க்குள் அரசு தேர்வுகள் இயக்ககம் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

