உத்தரகோசமங்கையில் ஆறு மாதங்களாக காட்சிப்பொருளான சிசிடிவி கேமராக்கள்
உத்தரகோசமங்கையில் ஆறு மாதங்களாக காட்சிப்பொருளான சிசிடிவி கேமராக்கள்
UPDATED : அக் 12, 2026 08:17 PM
ADDED : அக் 12, 2026 08:14 PM
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில் பகுதியில் ஆறு மாதங்களாக சிசிடிவி கேமராக்கள் சேதமடைந்து காட்சிப்பொருளாக உள்ளன.
உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் பிரசித்தி பெற்றது. இங்கு நாள்தோறும் வெளி மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் மற்றும் யாத்ரீகர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகின்றனர். இந்நிலையில் உத்தரகோசமங்கையின் நான்கு ரத வீதிகளிலும் பாதுகாப்பு கட்டமைப்பு வசதிக்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
கடந்த சித்திரை மாதம் நடந்த தேரோட்டத்தை முன்னிட்டு சாலையின் குறுக்காக சென்ற கண்காணிப்பு கேமராக்களின் ஒயர்கள் பெருவாரியாக துண்டிக்கப்பட்ட நிலையில் தற்போது வரை காட்சிப்பொருளாகவே உள்ளது. தன்னார்வலர்கள் கூறியதாவது:
உத்தரகோசமங்கை நான்கு ரத வீதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் தன்னார்வலர்கள் மற்றும் உத்தரகோசமங்கை போலீசாரின் முயற்சியால் கடந்த ஆண்டு பொருத்தப்பட்டது. நகரில் நிகழக்கூடிய குற்றச்சம்பவங்கள் மற்றும் விபத்து உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளையும் பதிவேற்றம் செய்யக்கூடிய கண்காணிப்பு கேமரா தற்போது பயன்பாடின்றி பழுதாகி உள்ளது.
எனவே அவற்றிற்கு உரிய முறையில் இணைப்புகள் வழங்கி மீண்டும் அவற்றை பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரகோசமங்கை போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
