/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பள்ளி, கல்லுாரி, அரசு அலுவலகங்களில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்
/
பள்ளி, கல்லுாரி, அரசு அலுவலகங்களில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்
பள்ளி, கல்லுாரி, அரசு அலுவலகங்களில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்
பள்ளி, கல்லுாரி, அரசு அலுவலகங்களில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்
ADDED : ஜன 13, 2024 04:50 AM

ராமநாதபுரம், : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ராமநாதபுரத்தில் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகளில் சமத்துவ பொங்கல் விழா போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல்விழா நடந்தது. கலெக்டர் விஷ்ணுசந்திரன் தலைமை வகித்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு,உதவி கலெக்டர் (பயிற்சி) சிவானந்தம் முன்னிலை வகித்தனர். வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் பழனிக்குமார், நிர்வாகிகள், உறுப்பினர்கள்,அலுவலர்கள் பங்கேற்றனர்.
* ராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா தலைமை வகித்தார். நேர்முக உதவியாளர்கள் கணேசபாண்டி, ரவீந்திரன், கண்காணிப்பாளர்கள் சண்முகநாதன், குமார், மாவட்ட கல்வி அலுவலர்(இடைநிலை) சுதாகர் உட்பட பலர் பங்கேற்றனர்.
* ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மதுக்குமார் தலைமை வகித்தார். திறன் பயிற்சி மையம் மாவட்ட அலுவலர் அருண்நேரு, தன்னார்வளர்கள் பங்கேற்றனர்.
* ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை-அறிவியல் கல்லுாரியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. பட்டிமன்றம், கலைநிகழ்ச்சிகள், போட்டிகள் நடந்தன. செய்யது அம்மாள் அறக்கட்டளை மருத்துவமனை டாக்டர் பாத்திமா சானாஸ் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் பாலகிருஷ்ணன், நிர்வாக அலுவலர் சாகுல் அமீது, மேற்பார்வையாளர் சபியுல்லா பங்கேற்றனர்.
* திருப்பாலைக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களின் கலை நிகழ்ச்சி, விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. தலைமை ஆசிரியர் ராஜூ, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் ராணி, பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் பாத்திமா கனி, ஆசிரியர் பயிற்றுனர் உலகநாதன், பெற்றோர் பங்கேற்றனர்.