/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் மாவட்டத்தில் கல்லறை திருநாள்
/
ராமநாதபுரம் மாவட்டத்தில் கல்லறை திருநாள்
ADDED : நவ 03, 2024 04:33 AM

ராமநாதபுரம்: ஆண்டு தோறும் நவ.2ல் உலகம் முழுவதும் கல்லறை திருநாள் கடைபிடிக்கப்படுகிறது. ராமநாதபுரத்தில் நேற்று கல்லறைகளை சுத்தம் செய்து மலர் துாவி, மெழுகுவர்த்தி ஏற்றி வழிபாடு செய்தனர்.
கிறிஸ்தவர்கள் ஆன்மாக்களின் திருநாள் என்று அழைக்கப்படும் கல்லறை திருநாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இயேசு பிரான் சிலுவையில் அறையப்பட்ட மூன்றாவது நாள் உயிர்த்தெழுந்தார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை.
அன்றைய தினம் கிறிஸ்தவர்கள் தங்கள் முன்னோர், உறவினர்கள் நினைவாக அவர்களது ஆத்மா சாந்தியடைய உடலை அடக்கம் செய்த கல்லறைக்கு சென்று மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி வணங்கினர்.
ராமநாதபுரத்தில் நடந்த கல்லறை திருநாள் சிறப்பு திருப்பலியில் பாதிரியார் சிங்கராயர் பங்கேற்று நடத்தினார். ஏராளமானவர்கள் கல்லறைகளில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.