நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : தொண்டி அருகே நம்புதாளையில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது.
அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ரமேஷ், வட்டார வளமைய மேற்பார்வையாளர் கார்த்திக் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவினர் வீடு, வீடாக சென்று பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுத்தனர்.
இதில் 20 பேர் பள்ளி செல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டு அவர்களை பள்ளியில் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.