மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்
மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்
UPDATED : ஜூலை 15, 2026 03:56 PM
ADDED : ஜூலை 15, 2026 03:51 PM
திருவாடானை:திருவாடானை பஸ்ஸ்டாண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம் குறித்து விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை கலெக்டர் சிவகுருபிரபாகரன் துவக்கி வைத்தார். திருவாடானையில் உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம் கலெக்டர் சிவகுருபிரபாகரன் தலைமையில் நேற்று காலை துவங்கியது. முன்னதாக திருவாடானை பஸ்ஸ்டாண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் முக்கியத்துவம் இதற்கு மக்கள் அளிக்க வேண்டிய ஒத்துழைப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யபட்ட கண்காட்சியை பார்வையிட்டார்.
தொண்டி உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளுக்கு சென்று அங்கு நடைபெற்று வரும் பல்வேறு அரசு நலத்திட்டங்கள் சார்ந்த வளர்ச்சி பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந் நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் திவ்யான்ஷிகம், மாவட்ட வருவாய் அலுவலர் சங்கரநாராயணன், ஆர்.டி.ஓ. ஹபிபுர்ரகுமான், உதவி திட்ட அலுவலர் ராஜா, தாசில்தார் ஆண்டி, பி.டி.ஓ. விஜி, பி.டி.ஓ. (ஊராட்சி) ஜெயமுருகன் பங்கேற்றனர்.
