தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/மக்கள் தொகை கணக்கெடுக்கும் ஆசிரியர்களுக்கு  வழிகாட்டுதல் தேவை: மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் நடத்துங்கள்

மக்கள் தொகை கணக்கெடுக்கும் ஆசிரியர்களுக்கு  வழிகாட்டுதல் தேவை: மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் நடத்துங்கள்

மக்கள் தொகை கணக்கெடுக்கும் ஆசிரியர்களுக்கு  வழிகாட்டுதல் தேவை: மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் நடத்துங்கள்


ADDED : ஜூலை 08, 2026 11:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 08, 2026 11:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்புல்லாணி: -ராமநாதபுரம் மாவட்டத்தில் வீடுகள் மற்றும் வீட்டு பட்டியல் கணக்கெடுக்கும் பணியில் பள்ளி ஆசிரியர்கள் அனைவருமே பயிற்சியில் பங்கேற்க உள்ளதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும். எனவே அதற்குரிய வழிகாட்டுதலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 ராமநாதபுரம் மாவட்டத்தில் வீடுகள் மட்டும் வீட்டு பட்டியல் கணக்கெடுக்கும் பணிகள் ஆக., 1 முதல் 30 வரை நடக்க உள்ளது. அதற்கு முன்னேற்பாடாக கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியங்களில் இருந்தும் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் பொறுப்பு அலுவலர்களாகவும், கள பயிற்றுனர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 ஆண்டு முதல் கட்டமாக ஆக., 1 முதல் 30 வரை வீடுகள் மட்டும் வீட்டு பட்டியல் கணக்கெடுப்பு நடக்க உள்ளது. அதற்கு முன்னேற்பாடாக கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பர்வையாளர்கள் தேர்வு செய்யும் பணி ஜூன் 25க்குள் முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு ஜூலை 7 முதல் 15க்குள் நடக்க உள்ளது.

ராமநாதபுரம், ராமேஸ்வரம், கீழக்கரை உள்ளிட்ட தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளுக்கு சேதுபதி அரசு கலைக் கல்லுாரியில் முதல் கட்டமாக நடக்க உள்ளது. இதே போன்று 2ம் கட்டம் மற்றும் 3ம் கட்ட பயிற்சி விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் கூறியதாவது:

ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பணியாற்றும் இரு ஆசிரியர்கள் மற்றும் ஐந்து ஆசிரியர்கள் உள்ள பள்ளியில் அனைவருமே இந்த மக்கள் தொகை பயிற்சி முகாமில் கலந்து கொள்ள வேண்டும் என வருவாய்த் துறை சார்பில் நிர்பந்திகின்றனர். ஆசிரியர்கள் அனைவரும் மாற்றுப் பணிக்கு சென்றால் என்ன ஆவது.

இதனால் மாணவர்களின் கல்வியை சார்ந்தும் வருவாய்த் துறையின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு தவிக்கிறோம். எனவே மாவட்ட கல்வித்துறை உரிய வழிகாட்டுதலை வழங்க வேண்டும் என்றனர். மாவட்ட கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:

கண்டிப்பாக வேலை நாட்களில் பள்ளிக்கூடம் திறந்து இருக்க வேண்டும். இரு ஆசிரியர்களுக்கு மேல் உள்ளவர்களுக்கு மாற்று பணியாக இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்வது அவசியம். இருப்பினும் பள்ளி வழக்கம் போல் நடக்கும். எனவே மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியில் பங்கேற்பது அவசிய தேவை என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us