ADDED : மார் 21, 2026 08:22 AM
முதுகுளத்துார்: முதுகுளத்துார் சட்டசபை தொகுதியில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் போலீசார்,மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் இணைந்து அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.
டி.எஸ்.பி., சண்முகம் தலைமை வகித்தார். பொசுக்குடி பட்டி, வெங்கலக்குறிச்சி, விளங்குளத்துார், சுப்பிரமணியபுரம், கீழத்துாவல், மேலத்துாவல் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் துப்பாக்கி ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
தேர்தல் நடத்தை விதிகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும். வாக்காளர்கள் அச்சமின்றி ஓட்டு அளிக்கலாம். பதட்டமான ஓட்டுச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது. மத்திய ஆயுதப்படை வீரர்கள், போலீசார் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக டி.எஸ்.பி., சண்முகம் கூறினார்.
இன்ஸ்பெக்டர்கள் இளையராஜா, சந்திரசேகர், ராஜேந்திரன், ஜெகதீசன், துரைப்பாண்டியன், ஜக்குபாய் உட்பட 100க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர்.
