பரமக்குடியில் மத்திய பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு
பரமக்குடியில் மத்திய பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு
ADDED : மார் 17, 2026 05:11 AM

பரமக்குடி: சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பரமக்குடியில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் போலீஸ் அணிவகுப்பு நடந்தது.
மாநிலம் முழுவதும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழக மற்றும் மத்திய போலீஸ் பாதுகாப்பு படையினரின் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி பரமக்குடியில் ஐந்து முனை ரோடு துவங்கி ஆர்ச், பஸ் ஸ்டாண்ட், வேந்தோணி விலக்கு ரோடு வரை போலீசார் அணி வகுத்து சென்றனர்.
பரமக்குடி டி.எஸ்.பி., ஜெபராஜ் தலைமையில் மத்திய பாதுகாப்பு படை எஸ்.ஐ.,கள் குண்டு, மிஸ்ரா உட்பட 14 பெண் மற்றும் 39 ஆண் வீரர்கள் என 60 பேர் பங்கேற்றனர். பரமக்குடி மற்றும் அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களை சேர்ந்த இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., க்கள் உள்ளிட்ட போலீசார் 45 பேர் என 105 பேர் அணி வகுத்து சென்றனர். பரமக்குடி தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர்கள் அச்சமின்றி ஓட்டளிக்கும் வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
