/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கருப்பை வாய்ப்புற்று நோய் விழிப்புணர்வு
/
கருப்பை வாய்ப்புற்று நோய் விழிப்புணர்வு
ADDED : ஆக 09, 2025 11:14 PM
ராமநாதபுரம்: செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லுாரியில் கருப்பை - வாய்ப் புற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு, தடுப்பு நடவடிக்கை குறித்த ஒருநாள் கருத்தரங்கம்நடந்தது. முதல்வர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
செய்யது அம்மாள் அறக்கட்டளை மருத்துவமனை டாக்டர் பாத்திமா சானாஸ் பரூக் கருப்பை - வாய்ப் புற்றுநோய் வராமல் தடுப்பதற்கான ஆரோக்கியமான உணவு முறைகள்குறித்து பேசினார்.சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட டாக்டர்கள் ஷப்னம், பிரவீணா, விக்னேஷ் பேசியதாவது:
புற்றுநோய் உருவாவதற்கான காரணங்களை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். புகையிலை, மது, ஆரோக்கியமற்ற உணவுகள் தான் நோய்க்கான முக்கிய காரணங்கள். புற்றுநோய் வருமுன் தவிர்க்க 9 முதல் 14 வயது வரை முறையாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றனர்.
கல்லுாரி தாளாளர் செல்லத்துரை அப்துல்லா, செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் ராஜாத்தி அப்துல்லா, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சக்திவேல், நிர்வாக அலுவலர் சாகுல் ஹமீது, மேற்பார்வையாளர் சபியுல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.