ADDED : பிப் 06, 2026 05:24 AM
அ நிறம் | அளவு
கமுதி: திருப்பூரைச் சேர்ந்த லெனின் மகள் சரண்யா 40. அபிராமத்தில் வசிக்கிறார். கமுதி அருகே கோட்டைமேட்டில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்றார்.
கோட்டைமேடு நீதிமன்றம் அருகே சென்ற போது அங்கு டூவீலரில் வந்த அடையாளம் தெரியாத இருவர் சரண்யா அணிந்திருந்த மூன்று பவுன் செயினை பறித்து தப்பிச் சென்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
