/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கீழக்கரையில் இரு நாள் நடந்த சண்டி யாகம்
/
கீழக்கரையில் இரு நாள் நடந்த சண்டி யாகம்
ADDED : ஜூலை 22, 2025 11:49 PM
கீழக்கரை; கீழக்கரை தட்டான் தோப்பு தெருவில் உள்ள நாராயணசுவாமி, பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று முன்தினம் மற்றும் நேற்று இரு நாட்களில் உலக நன்மைக்காக மகா சண்டி யாக வேள்வி நடந்தது.
ஜூலை 21ல் கணபதி பூஜை, சண்டி பாராயணம், சப்தசதி பாராயணம் பூஜைகளுடன் துவங்கியது. அலங்கரிக்கப்பட்ட உற்ஸவர் அம்மனுக்கு முன்பாக பெரிய யாக குண்டம் வளர்க்கப்பட்டு அவற்றில் பழங்கள், வஸ்திரங்கள், கனி வகைகள் மற்றும் மூலிகை மருந்து பொருட்கள் சமர்ப்பிக்கப்பட்டு தொடர் யாகசாலை வேள்வி மந்திரங்களை சிவாச்சாரியார்கள் முழங்கினர். காலை 11:30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.
சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கீழக்கரை தட்டான் தோப்பு தெரு ஹிந்து நாடார் உறவின்முறை சங்கம் மற்றும் இளைஞர் சங்கத்தினர் செய்திருந்தனர்.