ADDED : ஜூலை 15, 2025 10:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை; கீழக்கரை தட்டான் தோப்பு தெருவில் உள்ள நாராயணசுவாமி, பத்ரகாளி அம்மன் கோயிலில் உலக நன்மைக்காக மகா சண்டி யாகம் நடக்கிறது.
ஜூலை 21ல் கணபதி பூஜை, சண்டி பாராயணம், சப்தசதி பாராயணம் பூஜைகளுடன் துவங்கி ஜூலை 22 காலை 8:00 மணி முதல் சண்டி ஹோமம் நடக்கிறது. 11:00 மணிக்கு மேல் தீபாராதனைகள் நடக்கிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
ஏற்பாடுகளை கீழக்கரை தட்டான் தோப்பு தெரு ஹிந்து நாடார் உறவின்முறை சங்கம் மற்றும் இளைஞர் சங்கத்தினர் செய்து வருகின்றனர்.

