ADDED : மார் 10, 2024 02:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்:மகா சிவராத்திரி விழாவையொட்டி நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ரத வீதியில் மாசித் தேரோட்டம் நடந்தது.
ராமேஸ்வரம் கோயிலில் மாசி மகா சிவராத்திரி விழா மார்ச் 1ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 9ம் நாளான நேற்று கோயிலில் இருந்து சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன், பிரியாவிடை அம்மன் புறப்பாடாகி அலங்கரிக்கப்பட்ட மாசித்தேரில் எழுந்தருளினர்.
தீபாராதனைக்குப்பின்னர் ஏராளமான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்தனர். கோயில் நான்கு ரதவீதிகளில் தேர் வலம் வந்தது. இணை ஆணையர் சிவராம்குமார், பா.ஜ., மாவட்ட பார்வையாளர் முரளிதரன், நகர் தலைவர் ஸ்ரீதர், பா.ஜ., மாவட்ட செயற்குழு ராமு, யாத்திரை பணியாளர் சங்க தலைவர் பாஸ்கரன், ஹிந்து மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் பிரபாகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

