/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி புனித அலங்கார மாதா சர்ச்சில் தேர் பவனி
/
பரமக்குடி புனித அலங்கார மாதா சர்ச்சில் தேர் பவனி
ADDED : செப் 01, 2025 10:17 PM
பரமக்குடி : பரமக்குடி அலங்கார மாதா சர்ச் நவநாள் திருப்பலி விழாவையொட்டி தேர்ப்பவனி நடந்தது.
பரமக்குடி ஐந்து முனை ரோடு அருகில் புனித அலங்கார மாதா சர்ச் உள்ளது. இங்கு கடந்த வாரம் அன்னையின் நவநாள் திருப்பலி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் மாலை சிறப்பு திருப்பலி நடந்தது. மேலும் அலங்கார மாதா சர்ச் வளா கத்தில் வலம் வந்தார்.
நேற்றுமுன்தினம் இரவு சிவகங்கை மாவட்ட முன்னாள் பிஷப் சூசை மாணிக்கம், பரமக்குடி பங்கு பணியாளர் இருதய ராஜ் முன்னிலையில் திருப்பலி நடத்தப்பட்டு தேர்ப்பவனி துவங்கியது.
முக்கிய வீதிகளில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேர் வலம்வந்து மீண்டும் சர்ச்சை அடைந்தது. சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தில் பங்கு பணியாளர்கள், இறை மக்கள், பங்கு மக்கள், அமலவை அருள் சகோதரிகள், அன்பியங்கள் பங்கேற்றனர். நேற்று கொடி இறக்கப்பட்டு விழா நிறைவடைந்தது.