ADDED : ஜூன் 08, 2025 04:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி விசாக திருவிழா நடக்கிறது.
நேற்று முன்தினம் இரவு சுவாமி வீதி உலா நடந்தது.
மூஞ்சுறு வாகனத்தில் விநாயகர், மயில் வாகனத்தில் முருகன், அதிகார நந்தி வாகனத்தில் பிரியாவிடையுடன் ஆதிரெத்தினேஸ்வரர், காமதேனு வாகனத்தில் சிநேகவல்லி அம்மன், கேடக வாகனத்தில் சண்டிகேஸ்வரர் வீதி உலா நடந்தது.
இன்று (ஜூன் 8) மதியம் 3:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.