/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி சுப்ரமணிய சுவாமி கோயிலில் சத்ரு சம்ஹார ஹோமம்
/
பரமக்குடி சுப்ரமணிய சுவாமி கோயிலில் சத்ரு சம்ஹார ஹோமம்
பரமக்குடி சுப்ரமணிய சுவாமி கோயிலில் சத்ரு சம்ஹார ஹோமம்
பரமக்குடி சுப்ரமணிய சுவாமி கோயிலில் சத்ரு சம்ஹார ஹோமம்
ADDED : ஜூலை 20, 2025 11:04 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: -பரமக்குடி தரைப்பாலம் அருகில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோயிலில் 4ம் ஆண்டு சத்ரு சம்ஹார ஹோமம் நடந்தது.
இங்கு ஆடி கார்த்திகையில் நேற்று காலையில் விநாயகர் பூஜை, வருண பூஜை, பஞ்சகவிய பூஜையுடன் விழா துவங்கியது.
வேல் அர்ச்சனை, சத்ரு சம்ஹார மூல மந்திர திரிசதி அர்ச்சனை, சன்னவதீ ஹோமம் நடத்தப்பட்டது.
தீர்த்த குடங்கள் புறப்பாடாகியது. தொடர்ந்து மூலவர், உற்ஸவர் மற்றும் வேலுக்கு அபிஷேகம் செய்து, தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
இரவு ஆன்மிக பட்டிமன்ற நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை சத்ரு சம்ஹார ஹோம விழா குழுவினர் செய்தனர்.