/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நடிகர் சீனிவாசன் மீதான செக் மோசடி வழக்கு தள்ளிவைப்பு
/
நடிகர் சீனிவாசன் மீதான செக் மோசடி வழக்கு தள்ளிவைப்பு
நடிகர் சீனிவாசன் மீதான செக் மோசடி வழக்கு தள்ளிவைப்பு
நடிகர் சீனிவாசன் மீதான செக் மோசடி வழக்கு தள்ளிவைப்பு
ADDED : மார் 21, 2024 01:27 AM
ராமநாதபுரம்:ராமநாதபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்கில் நேற்று நடிகர் சீனிவாசன் ஆஜராகாததால் விசாரணையை மார்ச் 26 க்கு நடுவர் நிலவேஸ்வரன் தள்ளிவைத்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் பிள்ளையார்கோயில் தெரு முனியசாமி 55. இவர் இறால் பண்ணையும், உப்பளமும் நடத்தி வருகிறார். இவர் தொழிலை விரிவுபடுத்தும் நோக்கத்தோடு ரூ.15 கோடி கடன் வங்கியில் கேட்டிருந்தார். அதே பகுதியை சேர்ந்தவர்கள் கடன் பெற்றுத்தருவதாக கூறி நடிகர் சீனிவாசனிடம் அழைத்து சென்றனர்.
சீனிவாசன் இதற்கு முத்திரைக் கட்டணமாக ரூ.15 லட்சம் பெற்றுக்கொண்டார். ஆனால் கடன் பெற்று தரவில்லை. கொடுத்த பணத்தை முனியசாமி திருப்பி கேட்டுள்ளார். இதற்காக சீனிவாசன் ரூ.14 லட்சத்துக்கு வழங்கிய வங்கி காசோலை பணம் இன்றி திரும்பி வந்தது. இதுகுறித்து வழக்கு ராமநாதபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1ல் முனியசாமி சீனிவாசனுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் சீனிவாசன் உடல் நலக்குறைவால் நேற்று ஆஜராகவில்லை. விசாரணை மார்ச் 26க்கு தள்ளிவைக்கப்பட்டது.

