/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குளத்தில் மூழ்கி சென்னை வாலிபர் பலி
/
குளத்தில் மூழ்கி சென்னை வாலிபர் பலி
ADDED : மே 20, 2025 04:25 AM

ராமநாதபுரம்: சென்னை, செங்குன்றத்தைச் சேர்ந்தவர் யுவராஜ், 28. அவரது மனைவி கவுசல்யா. இருவரும் ராமநாதபுரம், ஓம்சக்தி நகரில் உள்ள கவுசல்யாவின் சித்தப்பா ஆனந்தகுமார், 40, வீட்டிற்கு கோடை விடுமுறைக்காக வந்தனர்.
நேற்று அனைவரும் குடும்பத்துடன் ராமேஸ்வரம், தனுஷ்கோடி பகுதிகளை சுற்றி பார்த்தனர். மாலை, 4:00 மணிக்கு அரியமான் குஷி பீச் சென்றனர். அங்கு நீச்சல்குளத்தில் குளித்த யுவராஜ், நீரில் மூழ்கி பலியானார். ஆனந்தகுமார், யுவராஜின் உடலை மீட்டு, உச்சிப்புளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
வழியில் ஆனந்தகுமாருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு மாரடைப்பால் இறந்தார். இருவரது உடல்களும் உச்சிப்புளி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டன. உச்சிப்புளி போலீசார் விசாரிக்கின்றனர்.