ADDED : ஆக 31, 2026 07:11 PM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட செஸ் அசோசியேஷன், வாணி வேலுமாணிக்கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் மாநில அளவில் 2வது செஸ் போட்டி பள்ளி வளாகத்தில் நடந்தது. தாளாளர் பரந்தாமன் தலைமை வகித்தார். முதல்வர் பரிமளா ஆண்டனி, புரவலர் தேவி உலக ராஜ், ஆர்.எம்.செஸ்., அகாடமி தலைவர் சொர்ண கணபதி முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செஸ் அசோசியேஷன் தலைவர் சுந்தரம் வரவேற்றார். 7, 9, 11, 13, 15 வயது பிரிவினருக்கான போட்டியில் 400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். முதல் மூன்று இடங்களில் வென்றவர்களுக்கு பரிசுகளும், பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மாவட்ட வர்த்தக சங்க பொதுச் செயலாளர் குப்தா கோவிந்தராஜன், ராமநாதபுரம் பி.டி.ஓ., சோமசுந்தர் பங்கேற்றனர். சங்க பொருளாளர் குணசேகரன் நன்றி கூறினார். மாவட்ட செஸ் அசோசியேஷன் செயலாளர் ரமேஷ் ஏற்பாடு செய்தார்.–––
