நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே செங்குடி புனித மிக்கேல் மேல்நிலைப் பள்ளியில் வட்டார செஸ் போட்டி நடந்தது. தலைமை ஆசிரியர் பாக்கிய ரோசரி தலைமையில் ரோட்டரி சங்க தலைவர் பாண்டியன் போட்டிகளை துவக்கி வைத்தார்.
பல்வேறு பள்ளி மாணவர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முன்னாள் ரோட்டரி சங்க தலைவர் கருணாகரன், உடற்கல்வி ஆசிரியர் குமார் பங்கேற்றனர்.