/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மரக்கன்றுகள் நட்ட தலைமை நீதிபதி
/
மரக்கன்றுகள் நட்ட தலைமை நீதிபதி
ADDED : ஏப் 22, 2025 05:47 AM

முதுகுளத்துார்: ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் முதுகுளத்துார் வட்ட சட்டப்பணிகள் குழு இணைந்து உத்தரகோச மங்கையில் இருந்து பனைக்குளம் ரோடு வரை ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிபதி மெகபூப் அலிகான் தலைமை வகித்தார். கூடுதல் மாவட்ட நீதிபதி கவிதா, தலைமை நீதித்துறை நீதிபதி மோகன்ராம், சார்பு நீதிபதி அகிலா தேவி, மாவட்ட சட்டப் பணிகள் குழு செயலாளர் பிரசாத், டி.ஆர்.ஓ., கோவிந்தராஜலு முன்னிலை வகித்தனர்.
அப்போது உத்தரகோசமங்கையில் இருந்து ரோட்டோரத்தில் ஆயிரம் மரக்கன்றுகளை நீதிபதிகள் நட்டு வேலி அமைத்து பராமரிக்க உத்தரவிட்டனர்.
பின் முதுகுளத்துார் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்று நட்டு நலத்திட்டங்கள் குறித்தும், மரங்கள் வளர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள், சட்ட உதவிகள் பற்றி நீதிபதிகள் விளக்கினர்.
முதுகுளத்துார் அருகே செல்வநாயகபுரத்தில் அடிப்படை வசதிகள் குறித்து மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. முதுகுளத்தூர் சார்பு நீதிபதி ராஜகுமார், நீதித்துறை நீதிபதிகள் சங்கீதா, சாது சிவசுப்பிரமணியன், அருண்சங்கர் உட்பட வழக்கறிஞர்கள் பலர் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை சட்ட தன்னார்வலர் அடைக்கலமேரி செய்தார்.