/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்
/
மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்
ADDED : ஜன 13, 2024 04:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலத்தில் மக்களுடன் முதல்வர்திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி தலைமை வகித்தார். தாசில்தார் சுவாமிநாதன், பேரூராட்சி தலைவர் மவுசூரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் இருந்தும் மனுக்கள் பெறப்பட்டன. இதில் பட்டா மாறுதல், கணினி திருத்தம்,புதிய ரேஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த மனுக்கள் அளிக்கப்பட்டன.
முகாமில் 280 மனுக்கள் பெறப்பட்டன.