/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கீழக்கரையில் முதல்வரின் காலை உணவுத்திட்ட துவக்க விழா
/
கீழக்கரையில் முதல்வரின் காலை உணவுத்திட்ட துவக்க விழா
கீழக்கரையில் முதல்வரின் காலை உணவுத்திட்ட துவக்க விழா
கீழக்கரையில் முதல்வரின் காலை உணவுத்திட்ட துவக்க விழா
ADDED : ஆக 27, 2025 12:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை; முதல்வரின் காலை உணவு திட்டம் கீழக்கரையில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் துவக்கப்பட்டது.
ஏற்கனவே கீழக்கரையில் உள்ள இரண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்து வரும் வேளையில் கூடுதலாக 7 பள்ளிகளில் திட்டம் நேற்று காலை 8:30 மணிக்கு துவக்கி வைக்கப்பட்டது. கீழக்கரை நகராட்சி தலைவர் செஹானாஸ் ஆபிதா தலைமை வகித்தார்.
நகராட்சி பொறியாளர் அருள் முன்னிலை வகித்தார். நகராட்சி மேலாளர் உதயகுமார், சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா மற்றும் கவுன்சிலர்கள், பள்ளி நிர்வாகத்தினர் பெற்றோர் கலந்து கொண்டனர்.