/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முதல்வர் வருகை: 150 பேர் தேர்வு
/
முதல்வர் வருகை: 150 பேர் தேர்வு
ADDED : செப் 27, 2025 11:25 PM
திருவாடானை: ராமநாதபுரத்திற்கு முதல்வர் ஸ்டாலின் செப்.,29, 30ல் வருகை தர இருப்பதால் நலத்திட்ட உதவிகளுக்காக பயனாளிகள் தேர்வு செய்யும் பணி நடக்கிறது.
திருவாடானை தாலுகாவில் இருந்து பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, மகளிர் உதவித் தொகை என பல்வேறு நலத்திட்டங்களில் இருந்து பயன்பெறும் வகையில் 150 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்களை பஸ்களில் ராமநாதபுரத்திற்கு அழைத்து செல்ல வருவாய்த்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
திருவாடானையில் இருந்து பஸ் புறப்படும் நேரம் குறித்து அவர் களுக்கு தெரிவிக்கப் பட்டுள்ளது. ராமநாத புரத்தில் விழா முடிந்த வுடன் திரும்ப அழைத்து வரப்படுவார்கள். இதற்கான பணிகளில் வருவாய்த்துறையினர் ஈடு பட்டுள்ளனர்.