/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முதல்வர் வருகை ஏற்பாடு டி.ஐ.ஜி., நேரில் ஆய்வு
/
முதல்வர் வருகை ஏற்பாடு டி.ஐ.ஜி., நேரில் ஆய்வு
ADDED : செப் 27, 2025 04:00 AM

ராமநாதபுரம்: முதல்வர் ஸ்டாலின் ராமநாதபுரம் வருவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை டி.ஐ.ஜி., மூர்த்தி ஆய்வு செய்தார்.
முதல்வர் ஸ்டாலின் மாவட்டந்தோறும் சென்று அரசின் திட்டப் பணிகள் குறித்து கள ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
செப்.29, 30 இரு தினங்கள் ராமநாதபுரத்தில் ஆய்வு செய்கிறார். இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.
முதல்வர் வருகையை முன்னிட்டு பொதுகூட்டம் புல்லங்குடி காலியிடத்தில் மேடை அமைக்கும் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ராமநாதபுரம் டி.ஐ.ஜி., மூர்த்தி நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
பாதுகாப்பு குறைவான பகுதியில் கூடுதல் போலீசாரை பணியமர்த்துமாறு அறிவுறுத்தினார். ஆய்வின் போது எஸ்.பி., சந்தீஷ் உடனிருந்தனர்.