/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குழந்தை இயேசு சர்ச் கொடியேற்றம்
/
குழந்தை இயேசு சர்ச் கொடியேற்றம்
ADDED : ஜன 05, 2025 05:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜன.11ல் தேர் பவனி
பரமக்குடி, ஜன. 5--
பரமக்குடி அருகே உலகநாதபுரம் அற்புதக் குழந்தை இயேசு சர்ச்சில் 9ம் ஆண்டு பங்கு திருவிழாவையொட்டி கொடியேற்றம் நடந்தது.
பரமக்குடி வட்டார அதிபர் இருதயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடத்தி கொடியேற்றினார்.
முன்னதாக குழந்தை இயேசு உருவம் பொறித்த கொடியை சர்ச்சில் இருந்து ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
இதனை தொடர்ந்து குழந்தை இயேசு பல்லக்கில் பவனி வந்தார். பத்து நாட்கள் நடக்கும் விழாவில் ஜன. 11ல் தேர் பவனி நடக்கிறது.
தினமும் சிறப்பு திருப்பலிகள், ஜெபம் நடக்க உள்ளது.
ஜன.12 இறை உணவு விழா கொண்டாடப்பட உள்ளது.
கொடியேற்ற விழாவில் பங்கு மக்கள், பேரவையினர் திரளாக கலந்து கொண்டனர்.