/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஏர்வாடியில் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ஆய்வு மீட்டு பள்ளியில் சேர்த்தனர்
/
ஏர்வாடியில் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ஆய்வு மீட்டு பள்ளியில் சேர்த்தனர்
ஏர்வாடியில் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ஆய்வு மீட்டு பள்ளியில் சேர்த்தனர்
ஏர்வாடியில் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ஆய்வு மீட்டு பள்ளியில் சேர்த்தனர்
ADDED : ஆக 02, 2025 11:18 PM
கீழக்கரை : ஏர்வாடி ஊராட்சியிலும், தர்கா அருகே ஏராளமான சிறு குழந்தைகளை இடுப்பில் வைத்துக் கொண்டு சிறுவர், சிறுமிகளை வைத்து யாசகம் பெறும் போக்கு அதிகரித்து வந்தது.
இதனால் குழந்தைகளின் வாழ்வாதாரம் மற்றும் எதிர்காலத்திற்கான கல்வி கிடைக்க வழியின்றி அவர்களின் பொருளா தாரம் குறித்து மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும் என தினமலர் நாளிதழில் கடந்த வாரம் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக ஏர்வாடி ஊராட்சிக்கு உட்பட்ட மற்றும் ஏர்வாடி தர்கா பகுதிகளில் யாசகம் பெற்று வந்த சிறு குழந்தைகள் மற்றும் பள்ளி செல்லும் வயதுடைய சிறுவர் சிறுமிகளை தேடி கண்டுபிடித்து அவர்களது பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் மூலமாக மீட்டெடுக்கும் பணி நடந்தது.
ராமநாதபுரம் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்கள் (சைல்ட் லைன்) மற்றும் தன்னார்வ அமைப்புகளின் சார்பில் அப்பகுதியில் பொதுமக்களுக்கும் யாத்ரீகர்களுக்கும் இடையூறாக யாசகம் பெற்று வந்த சிறுவர், சிறுமிகளை அருகில் உள்ள அரசு பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது.
ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபை தலைவர் அகமது இப்ராஹிம் லெவ்வை கூறியதாவது:
நாள்தோறும் ஏராளமான யாத்ரீகர்கள் தர்காவிற்கு வரும் நிலையில் சிறு வயது குழந்தைகளை வைத்து யாசகம் செய்வோர் உரிய முறையில் கண்டறியப்பட்டு அவர்களுக்கான குடும்ப சூழ்நிலையை அறிந்து பொருளாதார உதவிகள் வழங்குவதற்கு தர்கா நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அரசுடன் இணைந்து ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம்.
இதனால் குழந்தைகளின் கல்வி மற்றும் வாழ்வாதார மேம்பாட்டிற்கு வழி கிடைக்கும் என்றார்.

