
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அறிஞர் அண்ணா நகராட்சி நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் தலைமை வகித்தார். ராமநாதபுரம் வட்டார கல்வி அலுவலர் ராமநாதன் முன்னிலை வகித்தார். தலைமை யாசிரியர் ஜெயந்தி வரவேற்றார்.
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு வேடமணிந்து மாணவர்கள் பேசினர். வினாடி வினா, பேச்சு போட்டி, கட்டுரை எழுதுதல், ஓவியப் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஆசிரியர் குணசேகரன் நன்றி கூறினார்.
குழந்தை தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் 'வாக் பார் சில்ட்ரன்ஸ்' நடை பயணம் நடந்தது. கூடுதல் கலெக்டர் வீர்பிரதாப் சிங் துவக்கி வைத்தார். குழந்தை பாதுகாப்பு தொடர்பாக அனைவரும் உறுதிமொழி எடுத்தனர்.
பாரதிநகர் வரை விழிப்புணர்வு பதாகைகளுடன் கல்லுாரி மாணவர்கள், போலீசார், குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள், தொழிலாளர் நலத்துறை, மருத்துவம், சுகாதாரத்துறை பணியாளர்கள் பங்கேற்றனர்.
ராமநாதபுரம் காங்., சார்பில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மலர்துாவி மரியாதை செலுத்தினர். மாவட்ட பொருளாளர் ராஜாராம் பாண்டியன் உட்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.