ADDED : மார் 15, 2026 04:48 AM
அ நிறம் | அளவு
ஆர்.எஸ்.மங்கலம்: மார்ச் 15-: ஆர்.எஸ்.மங்கலத்தில் நடந்த மிளகாய் சந்தைக்கு 20 கிலோ கொண்ட 600 மூடை குண்டு மிளகாய் வத்தல் விற்பனைக்கு வந்திருந்தன.
இந்நிலையில், முதல் தர பெரிய வகை குண்டு வத்தல் குவிண்டால் ரூ. 33 ஆயிரத்திற்கும், 2ம் தர சிறிய வகை குண்டு வத்தல் ரூ.29 ஆயிரத்திற்கும் விற்பனையாகியது.
சில்லரையில் கிலோ குண்டு மிளகாய் வத்தல் ரூ.300 முதல் ரூ.350 வரை விற்பனை செய்யப் பட்டது குறிப்பிடத் தக்கது. கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் குவிண்டாலுக்கு ரூ.2000 வரை வத்தல் விலை உயர்ந்துள்ளது.
