தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ குண்டு மிளகாய் வத்தல் குவிண்டால் ரூ.33 ஆயிரம்

 குண்டு மிளகாய் வத்தல் குவிண்டால் ரூ.33 ஆயிரம்

 குண்டு மிளகாய் வத்தல் குவிண்டால் ரூ.33 ஆயிரம்


ADDED : பிப் 01, 2026 06:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 01, 2026 06:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆர்.எஸ்.மங்கலம்: ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் சந்தையில் குண்டு மிளகாய் குவிண்டால் ரூ.33 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.

ஆர்.எஸ். மங்கலம் தாலுகா மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தை ஒட்டிய சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டாரப் பகுதிகளில் அதிகளவில் மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

அக்., மாதத்தில் மிளகாய் விதைப்பு செய்யப்பட்ட நிலையில் தற்போது மிளகாய் செடிகள் வளர்ச்சி அடைந்து அவற்றில் மிளகாய் பழங்களை பறிக்கும் நிலையை எட்டியுள்ளன.

இந்நிலையில் நேற்று ஆர். எஸ்.மங்கலம் மிளகாய் சந்தைக்கு புது வரவாக விவசாயிகள் குண்டு மிளகாய் புதிய வத்தல்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். விவசாயிகள் கொண்டு வந்திருந்த குண்டு மிளகாய் புதிய வத்தல் 10 கிலோ மூடை ரூ.3000 முதல் ரூ.3300 வரை விற்பனையாகியது. மொத்தமாக ஆர்.எஸ்.மங்கலம் சந்தைக்கு ஒரு குவிண்டால் (100 கிலோ) குண்டு மிளகாய் புதிய வத்தல் மட்டுமே விற்பனைக்கு வந்திருந்ததால் விலை ஏற்றம் ஏற்பட்டு குவிண்டால் ரூ.33 ஆயிரத்திற்கு விற்பனையானது.

குண்டு மிளகாய் பழைய வத்தல் கடந்த வாரம் குவிண்டால் ரூ.10 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட நிலையில் புதிய வத்தல் வரத்து குறைவால் குவிண்டாலுக்கு ரூ.7000 உயர்ந்து ரூ.17 ஆயிரத்திற்கு விற்பனையானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us