/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குண்டு மிளகாய் வத்தல் ரூ.17,500க்கு விற்பனை
/
குண்டு மிளகாய் வத்தல் ரூ.17,500க்கு விற்பனை
ADDED : ஏப் 06, 2025 05:32 AM
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம்சந்தையில் குண்டு மிளகாய் வத்தல் குவிண்டால் ரூ.17,500 வரை விற்பனையானது.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலத்தில்நடைபெற்ற மிளகாய் சந்தைக்கு 400 குவிண்டால் (ஒரு குவிண்டால் 100 கிலோ) குண்டு மிளகாய் வத்தல் மூடைகள் விற்பனைக்கு வந்தன.
வெளியூர் வியாபாரிகள் விவசாயிகளின் மிளகாய்வத்தலுக்கு விலை நிர்ணயம் செய்தனர்.
முதல் தரப் பெரிய வகை குண்டு வத்தல் குவிண்டால் ரூ.14,000 முதல் ரூ 17,500 வரை விற்பனையானது. இரண்டாம் தர சிறிய வகை குண்டு வத்தல் குவிண்டால் ரூ.11,000 ஆயிரம் முதல் ரூ.14,000 வரை விற்பனையானது.
ஒரு மாதத்திற்கும் மேலாக மிளகாய் வத்தல் தொடர் விலை வீழ்ச்சியை சந்தித்து வருவதால் மிளகாய் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.
வியாபாரிகள் கூறுகையில், 'வெளி மாநிலங்களில் சம்பா வத்தல் உற்பத்தி அதிகரிப்பு காரணமாகவும், வியாபாரிகளிடம் வத்தல் போதிய கையிருப்பு உள்ளதாலும் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது' என்றனர்.