/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மழையால் மிளகாய் விவசாயிகள் பாதிப்பு
/
மழையால் மிளகாய் விவசாயிகள் பாதிப்பு
ADDED : டிச 06, 2024 05:27 AM

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் பெய்த கன மழையால் மிளகாய் வயலில் தண்ணீர் தேங்கியதால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.
ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நெல் விவசாயத்திற்கு அடுத்தபடியாக மிளகாய் சாகுபடி நடக்கிறது.
செப்., கடைசி வாரத்தில் விதைப்பு செய்யப்பட்ட மிளகாய் செடிகள், ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் குத்துச்செடிகளாக வளர்ச்சி நிலையில் உள்ளன.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் கனமழையால் மிளகாய் வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. குறிப்பாக ஆர்.எஸ்.மங்கலம், செங்குடி, பூலாங்குடி, எட்டியத்திடல், முத்துப்பட்டினம், சேத்திடல், புல்லமடை, சவேரியார்பட்டினம், வல்லமடை, ராமநாதமடை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் மிளகாய் வயல்களில் மழைநீர் தேங்கியதால் மிளகாய் செடிகள் பாதிப்படைந்துள்ளன.
நேற்று இரவு பெய்த மழை நெல் விவசாயத்திற்கு ஏற்றதாக அமைந்துள்ள நிலையில் மிளகாய் செடிகளுக்கு பாதிப்பாக அமைந்துள்ளது.
இருப்பினும் மிளகாய் வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டுகின்றனர்.