/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் மாவட்டத்தில் மிளகாய் விவசாயிகள் பாதிப்பு! தொடர் பனி மூட்டத்தால் செடியில் கருகும் பூக்கள்

ADDED : ஜன 15, 2024 11:20 PM
ஆர்.எஸ்.மங்கலம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலவும் தொடர் பனி மூட்டத்தால் மிளகாய் செடிகளில் பூக்கள் கருகுவதால் பாதிப்படைந்துள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்தனர்.
மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அதிகாலை முதல் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அதிகாலை முதல் காலை 9:00 மணி வரை தொடர் பனிமூட்டம் நிலவுகிறது. ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அதிகளவில் மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், சாகுபடி செய்யப்பட்டுள்ள மிளகாய் செடிகளில் தற்போது பூக்கள் பூத்துக் காய்கள் காக்கும் நிலையை எட்டி உள்ளன.
இந்நிலையில் தொடர் பனி மூட்டத்தால் செடிகளில் உள்ள பூக்கள் கடும் பனிக்கு தாக்கு பிடிக்க முடியாமல் செடிகளில் பூக்கள் அழுகி வருகின்றன. இதனால் பூக்கள் காய்களாக மாற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மிளகாய் விவசாயிகளுக்கு கடுமையான மகசூல் இழப்பு ஏற்படக்கூடும் என்பதால் மிளகாய் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.
விவசாயிகள் கூறுகையில், தற்போது மிளகாய் செடிகளில் காய்ப்பு பருவம் துவங்கி உள்ளது. இந்நிலையில் தொடர்ந்து பெய்யும் பனியால் செடியில் உள்ள பூக்கள் உதிர்வதுடன், செடியிலேயே பூக்கள் வெம்பி வருகின்றன. இதனால் மகசூல் இழப்பு ஏற்படும் என்றனர்.
----