/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மிளகாய் வத்தல் குவிண்டால் ரூ.21,500க்கு விற்பனை
/
மிளகாய் வத்தல் குவிண்டால் ரூ.21,500க்கு விற்பனை
ADDED : மார் 17, 2025 08:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம், : ஆர்.எஸ். மங்கலத்தில் நடந்த மிளகாய் சந்தைக்கு சுற்றுப்புற பகுதிகளில் இருந்து மகசூலுக்கு வந்த குண்டு மிளகாய் வத்தலை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
அதற்கு வெளி மாவட்ட வியாபாரிகள் ஏலம் மூலம் விலை நிர்ணயம் செய்தனர். முதல் தர பெரிய வகை குண்டு வத்தல் குவிண்டால் (100 கிலோ) ரூ.21,500க்கும், இரண்டாம் தர சிறிய வகை குண்டு வத்தல் குவிண்டால் ரூ.15,000த்திற்கும் விற்பனை ஆகின.
சில்லறையில் முதல் தர பெரிய வகை குண்டு வத்தால் கிலோ ரூ.250க்கு விற்பனை செய்யப்பட்டது.