/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மிளகாய் சோடையானது விவசாயிகள் கவலை
/
மிளகாய் சோடையானது விவசாயிகள் கவலை
ADDED : மார் 27, 2025 07:21 AM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் தாலுகாவிற்க்கு உட்பட்ட கிராமங்களில் பெய்த மழையால் மிளகாய் சோடையானதால் கிலோ ரூ.20க்கு விற்கப்படும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
முதுகுளத்துார் தாலுகாவிற்கு உட்பட்ட தேரிருவேலி, காக்கூர், வளநாடு, பூக்குளம், கீழத்துாவல், அப்பனேந்தல் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் மிளகாய் விவசாயம் செய்தனர். மிளகாய் செடிகளுக்கு குறைந்தளவு தண்ணீர் போதுமானதால் ஊருணி, பண்ணைக்குட்டையில் தேக்கி வைத்த தண்ணீரை பாய்ச்சி வந்த நிலையில் நன்கு வளரத் துவங்கியது.
முதுகுளத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட கிராமங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. இதனால் நன்கு விளைச்சல் அடைந்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த மிளகாய் பழங்கள் வீணாகியது. மாவட்ட விவசாய அணி தலைவர் மைக்கேல் கூறியதாவது:
முதுகுளத்துார் தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களில் அவ்வப்போது பெய்த மழைக்கு மிளகாய் விவசாயம் முழுவதும் பாதிக்கப்பட்டது. மழையால் மிளகாய் சோடையாகி உள்ளது. ஒரு கிலோ மிளகாய் ரூ.130- -150க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது சோடையானதால் கிலோ ரூ.20க்கு விற்கப்படும் அவலநிலை உள்ளது.
மிளகாய் விவசாயத்தில் முழுவதும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் செலவு செய்த பணம் கூட கிடைக்காமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். மாவட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.