/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கமுதியில் மிளகாய் மண்டலம் பணிகளை துவங்க வேண்டும்
/
கமுதியில் மிளகாய் மண்டலம் பணிகளை துவங்க வேண்டும்
ADDED : ஜூலை 10, 2025 10:47 PM
கமுதி; கமுதியில் ரூ.5 கோடியில் மிளகாய் மண்டலம் அமைக்கப்படும் என அறிவித்த நிலையில் பணிகளை விரைவில் துவங்க வேண்டும் என்று அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கமுதியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. மாநில இளைஞரணி அமைப்புச் செயலாளர் சப்பாணி முருகன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் லெட்சுமணன் முன்னிலை வகித்தார். வடக்கு ஒன்றிய தலைவர் திருக்குமரன் வரவேற்றார்.
ரிசர்வ் வங்கி நெருக்கடியால் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், மாவட்ட கூட்டுறவு வங்கியில் கிசான் கடன் முறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். ராமநாதபுரம் மாவட்டம் குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு கிடைக்கப்பெற்றது.
மாவட்டத்தில் மிளகாய் சேமிப்பு கிடங்கில் பாதுகாத்து விவசாயிகள் நேரடியாக உரிய லாபத்தில் விற்பனை செய்யவும், தரம் உயர்த்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நோக்கில் கமுதியில் ரூ.5 கோடியில் மிளகாய் மண்டலம் அமைக்கப்படும் என 2023ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
தற்போது வரை முதற்கட்ட பணிகள் துவங்கவில்லை. எனவே பணிகளை விரைவில் துவங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட இளைஞர் அணி தலைவர் முனீஸ்வரன், துணைச்செயலாளர் முருகன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய இளைஞரணி செயலாளர் சித்தன்ஜி நன்றி கூறினார்.