/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சின்னாண்டி வலசை கிராம சபை கூட்டம்
/
சின்னாண்டி வலசை கிராம சபை கூட்டம்
ADDED : ஜன 27, 2025 06:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புல்லாணி: -திருப்புல்லாணி அருகே சின்னாண்டி வலசை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது.
யூனியன் அலுவலக பற்றாளர் முருகன் தலைமை வகித்தார்.
ஊராட்சி செயலர் சுமதி முன்னிலை வகித்தார். முன்னாள் ஊராட்சி தலைவர் சஞ்சய் காந்தி உட்பட கிராம மக்கள், துாய்மை பணியாளர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.
இதில் புதுக்கோவிலில் அரசு துணை சுகாதார நிலையம் அமைப்பதற்கு நன்கொடையாளர் இலவசமாக இடம் வழங்கியும் அவற்றில் இதுவரை எவ்வித கட்டுமான பணிகளும் மேற்கொள்ளாத நிலை குறித்து பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
எனவே அவ்விடத்தில் அரசின் துணை சுகாதார நிலையம் அமைப்பதற்கு உரிய நடவடிக்கை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

