ADDED : டிச 24, 2024 04:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே கொக்கூரணி செபஸ்தியார் சர்ச்சில் வின்சென்ட் தே பவுல் சபை சார்பில் கிறிஸ்து பிறப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
கொக்கூரணி கிளைத் தலைவர் ஆரோக்கியசாமி தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் அந்தோணிசாமி, செயலாளர் ஜன்சன் பிரிட்டோ, பொருளாளர் அருளானந்து முன்னிலை வகித்தனர். விழாவில் கிறிஸ்து பிறப்பு நிகழ்வுகள் குறித்த நாடகங்கள் நடத்தப்பட்டது.
தொடர்ந்து பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசுகள் வழங்கினர்.
சிறப்பு விருந்தினர்கள் சிவகங்கை மத்திய சபைத் தலைவர் பெர்னாட்ஷா, திட்டக் குழு தலைவர் சூசை ராஜ், வட்டார சபை தலைவர் தனிஸ்லாஸ், செயலாளர் அந்தோணி ராஜ்குமார், பொருளாளர் பிரிட்டோ உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.