/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருள் விற்பனை ஜோர்
/
கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருள் விற்பனை ஜோர்
ADDED : டிச 11, 2024 07:09 AM

ராமநாதபுரம் : கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ராமநாதபுரம் பஜார் பகுதியில் சாண்டகிளாஸ் தாத்தா, வண்ண மின் விளக்குகள், ஸ்டார், கிறிஸ்துமஸ் மரங்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் டிச.25ல் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சர்ச், வீடுகள், பள்ளிகள், கல்லுாரிகளில் இயேசு கிறிஸ்து பிறப்பை குறிக்கும் வகையில் குடில் அமைத்து பிரார்த்தனையில் ஈடுபடுகின்றனர்.
இதன் காரணமாக ராமநாதபுரம் கடைகளில் சாண்ட கிளாஸ் தாத்தா, வண்ண மின் விளக்குகள், ஸ்டார், கிறிஸ்துமஸ் மரங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. விலை ரூ.60 முதல்ரூ.1000 வரை விற்கப்படுகிறது. மக்கள் ஆர்வத்துடன் வாங்குவதாக வியாபாரிகள் கூறினர்.